HomeTNC Talents”தொலை தூரத்தி...

”தொலை தூரத்தில் தொடரும் நினைவுகள்” புத்தக விமர்சனம்

-

புத்தகம்: இரத்தினம் சூரியகுமாரன் எழுதிய ”தொலை தூரத்தில் தொடரும்
நினைவுகள்”

இந்தப் புத்தகம் எங்களுடைய சமூகத்தில் நீண்ட காலம் வாழ்ந்து வரும் திரு இரத்தினம் சூரியகுமாரன் எழுதிய சிறு கதைகளின் தொகுப்பு. இந்தப் புத்தகத்தில் இருக்கும் 20 கதைகள், தென்றல், வட கலிபோர்னியா கலை விழா மலர், போன்ற இதழ்களிலும் Facebook இலும் வெளியிடப்பட்டவை. அதில் ஒரு கதையான “உயர்ந்த மனிதன்” 2011 ஆண்டு தென்றல் இதழின்
சிறு கதை போட்டியில் முதல் பரிசு பெற்றது.

புத்தக எழுத்தாளர் திரு இரத்தினம் சூரியகுமாரன்

நான் சின்ன வயசில் அம்புலிமாமா என்ற மாத இதழை வாசிப்பது உண்டு. அதில் விக்கிரமாதித்தன் கதை எனக்கு மிகவும் பிடித்த கதை. பின் என் வாலிப வயதில், தமிழில் துப்பறியும் கதைகள் வாசிப்பது உண்டு. அதன் பின் கன காலமாக, தமிழ் கதைகள் வாசித்ததில்லை. அண்மையில், Facebook இல் சூரியகுமாரன் எழுதிய ஒரு கதையை வாசித்தேன். அந்தக் கதை வாசிக்க மிகவும் சுலபமாகவும் ஸ்வாரஸ்யமாகவும் இருந்தது. இந்த வருட ஆரம்பத்தில் இந்தப் புத்தகம் வெளியிடப்படபோது, மிகுந்த ஆவலோடு இதிலுள்ள கதைகளை வாசித்தேன்.

இந்த கதைகள் வாசிக்க மிகவும் இலகுவாக இருந்தது (easy read). மட்டுமல்லாமல் பல தமிழ் வார்த்தைகள் மீண்டும் என் நினைவுக்கு வந்தன. இந்த 20 கதைகளில் 7 கதைகள் இலங்கை பல்கலைக் கழகத்தை பின்னணியாகக் (background) கொண்டவை. அந்த கதைகளை வாசிக்கும் போது, என்னுடய பல்கலைக் கழக நாட்கள் ஞாபகத்திற்கு வந்தன. இனிமையான, சந்தோஷமான கவலை இல்லாத காலம் அவை. 2011 ஆம் ஆண்டு தென்றலில் முதல் பரிசு பெற்ற “உயர்ந்த மனிதன்” கதை பிரசுரமான போது, தென்றல் ஆசிரியர், சூரியகுமாரனின் கதைகளைப் பற்றி
எழுதிய விமரிசனத்தில் “வாழ்கையின் சோகங்களை மெல்லிய குரலில்

அழுந்தச் சொல்வது, அதிலும் காதலின் தங்க ரேகையை பின்னணியில் வரைவது இவரது கதைகளின் சிறப்பு” என்று மிகவும் அழகாக விளக்கம் கொடுத்திருந்தார்.
இனி புத்தகத்தில் உள்ள கதைகளை பற்றி சில கருத்துக்களைச் சொல்ல விரும்புகிறேன். புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிறுகதையான யாழினியில் 1983 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரம் தொடர்பான சம்பவங்களை அவர் தத்ரூபமாகச்
சித்தரித்துள்ளார். அத்தோடு, எம்முடைய சமுதாயத்தில் இருக்கும் பல பிற்போக்கான
நடைமுறைகளை இந்த கதைகள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார். உதாரணமாக, “ஒரு பாவக் கதை” என்ற சிறு கதையில், இருவர் ஒருவரை ஒருவர் விரும்பினாலும், ஆணின் தாய் தந்தையர் சாதி வேறுபாடு காரணமாக அவர்களுடைய கல்யாணத்துக்கு எதிராக இருந்தனர். அதனால் பல கவலைக்குரிய விளைவுகள் ஏற்படுவதை நாங்கள் அந்தக் கதையின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

“நல்லதோர் வீணை செய்தே” என்ற இன்னொரு சிறுகதையில், ரவியும் பிரியாவும், பேராதனை வளாகத்தில் பொறியியல் படித்துகொண்டிருந்தபோது, ஒருவரை ஒருவர் விரும்பினர். இறுதிப் பரீட்சையில் பிரியா (1 st Class) உம், ரவி (Ordinary Pass) உம் பெற்றதால், அது ரவிக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையைக் கொடுத்து, அதனால் அவர்கள் இறுதி பிரிய வேண்டி வந்தது. “பொருத்தம்” என்ற இன்னொரு கதையில், இருவர் (மோகனும் மலரும்) ஒருவரை ஒருவர் விரும்பியும் ஜாதகம் பொருந்தவில்லை என்ற காரணத்தால் ஏற்பட்ட பெற்றோரின் எதிர்ப்பால், வெவ்வேறு வழியில் சென்றனர். மலர் ஜாதகப் பொருத்தமுள்ள இன்னொருவரை மணந்தும், அவர் சில மாதங்களில் அகால மரணம் அடைகிறார். பின்னர் மலரும் மோகனும் ஒன்று சேர்ந்து நீண்டகாலம் சந்தோசமாக வாழ்ந்தார்கள். இன்னும் சில கதைகள் மனித இயல்புகளைச் சித்தரிக்கின்றன.

உதாரணமாக, “உயர்ந்த மனிதன்” என்ற கதை ஒருவரை நாம் அவசரப்பட்டு பிழையாக எடைபோட்டுவிடக் கூடாது என்ற கருத்தை உணர்த்துகிறது. சில மனிதர்களின் நல்ல உள்ளத்தை வெளிக்காட்டுகிறது “அப்பாவின் தோட்டம்” மற்றும் “அமெரிக்காவில் அம்மா” போன்ற கதைகள். மொத்தத்தில், இந்த புத்தகத்தின் கதைகள் எஙகள் சமுதாயத்தில் நடந்த சம்பவங்களையும் நடைமுறைகளையும் பின்னணியாக வைத்து எழுதப் பட்டவை. அதனால் நிச்சயமாக இந்த கதைகளை நீங்கள் வாசித்து மகிழ்வீர்கள் என நம்புகிறேன்.

ABOUT THE AUTHOR

POST YOUR COMMENTS

Most Popular