HomeTNC Talentsயானையும் பூனை...

யானையும் பூனையும் – சிறுவர் பாடல்

-

Article from Kalai Vizha 2024 Magazine.

யானை ஒன்று இருந்ததாம் – காட்டில்
யானை ஒன்று இருந்ததாம்
பூனை ஒன்று இருந்ததாம் – வீட்டில்
பூனை ஒன்று இருந்ததாம்

தானை போல நடந்திடும் – நாட்டின்
தானை போல நடந்திடும்
யானைக் கென்றும் தலைக்கனம் – காட்டின்
யானைக் கென்றும் தலைக்கனம்

பூனை கண்டு நகைத்தது – குட்டிப்
பூனை என்று நகைத்தது
யானை என்னை வெல்வாயோ – காட்டின்
யானை என்னை வெல்வாயோ

என்ன போட்டி என்றது – பூனை
என்ன போட்டி என்றது
என்ன போட்டி என்றது- யானை
என்ன போட்டி என்றது

யானே போட்டி வெல்பவன் – இங்கு
யானே போட்டி வெல்பவன்
நீயே போட்டி வைத்திடு – எமக்குள்
நீயே போட்டி வைத்திடு

என்று சொன்னார் யானையார் – திமிரில்
நின்று சொன்னார் யானையார்
நன்றாய் எண்ணிப் பூனையார் – மிகவும்
நன்றாய் எண்ணிப் பூனையார்

சொன்ன போட்டி யாதெனில் – அங்கே
சொன்ன போட்டி யாதெனில்
சின்னப் பானை ஓன்றினுள் – நல்ல
சின்னப் பானை ஒன்றினுள்

யாரோ முதலில் புகுவது – நம்மில்
யாரோ முதலில் புகுவது
யானே வெல்வேன் என்றது – யானை
யானே வெல்வேன் என்றது 

 

பாலைக் குடிக்கும் பூனைக்கோ – சின்னப்
பானை புகுதல் பழக்கமே
காலை வைத்துப் பூனையும்  – உள்ளே
காலை வைத்துப் புகுந்தது

காலைத் தூக்கி யானையும்  – பெரிய
காலைத் தூக்கி யானையும்
பானை வாயில் வைத்ததாம் – சிறிய
பானை வாயில் வைத்ததாம்

பானை தூளாய் உடைந்ததாம் – அந்தப்
பானை தூளாய் உடைந்ததாம்
யானை வெட்கிக் குனிந்ததாம்  –  அந்த
யானை வெட்கிக்  குனிந்ததாம்

யானை கொண்ட கர்வத்தால் – பெரிய
யானை கொண்ட கர்வத்தால்
யானை தோற்று விட்டதாம் – இங்கே
யானை  தோற்று விட்டதாம்

பூனை கொண்ட புத்தியால் – குட்டிப்
பூனை கொண்ட புத்தியால்
பூனை வெற்றி பெற்றதாம் – இங்கே
பூனை வெற்றி பெற்றதாம்

தீய குணங்கள் கொள்ளாதே – நீயும்
தீய குணங்கள் கொள்ளாதே
தூய குணங்கள் கொண்டாடு – நீயும்
தூய குணங்கள் கொண்டாடு!

ABOUT THE AUTHOR

Sathishbalamurugan Murugaiah
Sathishbalamurugan Murugaiah
Community Contributor

POST YOUR COMMENTS

Recent Articles

Most Popular