ஒரு நிகழ்ச்சியை சமர்ப்பிக்கும் போது பின்வரும் வழிகாட்டுதல்களைக் கடைபிடியுங்கள்!

நிகழ்ச்சித் தேவைகளுக்கு இடமளிக்க TNC கலாச்சார குழு தனது சிறந்த முயற்சியை மேற்கொள்ளும் மற்றும் சாத்தியமில்லாத பட்சத்தில் TNC கலாச்சார துணைக் குழு, மாற்று வழிகளை ஒருங்கமைக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுடன் இணைந்து செயல்படும்.

நிகழ்ச்சி வழிகாட்டுதல்கள்:

  • TNC கலாச்சார துணைக் குழுவால் நிகழ்ச்சி நிரல் வரிசை இறுதி செய்யப்படும்.
  • பாட்டு, நடனம், வாத்தியம், நாடகம் போன்ற தமிழ் கலாச்சாரத்துடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்களிக்க சமூகத்தை ஊக்குவிக்கிறோம். கொடுக்கப்பட்ட எங்கள் கட்டமைப்பிற்கு ஏற்ப சமர்பிக்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும்.
  • அனைத்து நிகழ்ச்சிகளும் கட்டாயம்  தமிழ் மொழியினை மையமாக கொண்டதாக இருக்கவேண்டும் (பாடல்கள், உரையாடல்கள்)
  • கலை விழாவிற்கு அமைவு நேரம் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மூன்று மணத்தியாலங்களே ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் நிகழ்ச்சி நிரல் சமர்ப்பிப்பு பக்கத்தில் குறிப்பிடப்பட்ட நேர வரையறைக்குள் இருக்க வேண்டும் (அமைவு நேரம் உள்ளடங்களாக). எந்தவொரு நிகழ்ச்சியும் நேர வரையறையை மீறினால், ஒத்திகையின் போது மதிப்பாய்வு செய்யப்படும்.
  • சமூகப் பங்கேற்பை அதிகரிக்க குறைந்தபட்சம் 6 அல்லது அதற்கு மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட குழு நிகழ்ச்சிகளாக இருக்க வேண்டும்.
  • நிகழ்சிகளின் தரம் முக்கியமானது.

பங்கேற்பாளர்கள்:

  • TNC அமைப்பின் தற்போதைய உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்படும் . TNC இன் உறுப்பினர்களின் குழந்தைகளிடமிருந்து அதிகபட்ச பங்கேற்பை ஊக்குவிக்கிறது. TNC உறுப்பினராக இந்த படிவத்தைப் பயன்படுத்தலாம்.
  •  அனைவருக்கும் வாய்ப்புக்களை வழங்குமுகமாக பரந்த சமூகப் பங்கேற்பை நாங்கள் ஊக்குவிக்கிறோம்
  • பங்கேற்பாளர்களுடன் , அவர்களுடன் வரும் நண்பர்கள், உடன்பிறந்தவர்கள், பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டி உட்பட அனைவரும் நுழைவுச்சீட்டு வாங்க வேண்டும்.
  • ஒவ்வொரு தனி நபரும் அதிகபட்சம் இரண்டு நிகழ்வுகளில் uபங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்; எவரேனும் இரண்டுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்குபற்றினால், உடை மாற்றத்திற்கான நேரத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படமாடடாது
  • விதி விலக்குகளுக்கு பொருளாதர நிலமை கருத்தில் கொள்ளப்படும்.

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்கள் கலாச்சார ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொள்ளவும்:

cultural@tnc-usa.org

மேலும் ஒரு முக்கிய விடயம்:

நீங்கள் TNC நிகழ்ச்சிக்கு செலவு செய்யும் நேரத்தினை, நீங்கள் பணியாற்றும் வேலைதளத்தில் தொண்டு நேரமாக பதிவு செய்து, அதனை நன்கொடை பணமாக TNCயிற்கு வழங்க முடியும் என்பதனை அறிய தருகின்றோம். இதனை கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். இது தொடர்பாக மேலதிக தகவல்கள் தேவைபடின் எங்களை தொடர்புகொள்ளவும்.



Please do consider the following guidelines while submitting a program!

TNC will make its best effort to accommodate the program requirements and in case not possible the TNC Cultural Sub Committee will work with program producers to come up with agreeable alternatives.

Program Guidelines

  • Program line up is finalized by the TNC Cultural Sub Committee.
  • We encourage the community to contribute diversity of programs such as Singing, Dance, Instrumental, Drama, etc that are related to Tamil culture. Programs that fits our framework given will be given higher priority.
  • Unless a program requires a specific reason, all programs must incorporate Tamil language songs, dialogues, etc.
  • Total Program will be limited to 3 hours including set up time for Kalai Vizha, and 90 minutes for other events,
  • Each program is limited to a fixed time given in the program submission page; including setup time. Any program violates the time requirement will be subject to review during rehearsals.
  • We require group programs with minimum of 6 or more participants to maximize the community participation.
  • Each individual is allowed to participate in a maximum of two programs; the committee will not guarantee time for any costume change if anyone participates in more than two programs.
  • Quality of programs is important.

Participants

  • Only TNC members & children will get to participate in the programs. You can use the online form to become a TNC member.
  • We encourage wider community participation and provide opportunity for every individual to participate.
  • All attendees including friends, siblings, parents, and grandparents should purchase tickets.
  • Exceptions only on prior hardship approval.

Please feel free to reach out to our Co-Cultural Coordinators, if you have any questions: cultural@tnc-usa.org

Note:
Please be aware that several corporate companies allow participants (parents, producers) to log volunteer hours and donate the matching funds to TNC. We strongly encourage you to take advantage of this opportunity if possible. If you need further assistance regarding this matter, please feel free to contact us.

Next articleYouth Day 2016